அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 22 தினங்களில் 25 பேர் டெங்கு நோயளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.-Mannar

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த முதலாம் திகதி தொடக்கம் இன்று 22 ஆம் திகதி வரையிலான 22 நாட்களுக்குள் 25 டெஙகு நோயளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.றோய் பீரிஸ் தெரிவித்தார். தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தில் மன்னார் மாவட்டத்தில் மேற்கொற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் அவசர கலந்துரையாடல் ஒன்று இன்று திங்கட்கிழமை(22) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் தலைமையில் இடம் பெற்றது. 

இதன் போது கலந்து கொண்டு கருத்துத்தெரிவித்த மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.றோய் பீரிஸ் தெரிவித்தார். ஆவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 22 நாட்களுக்குள் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 டெங்கு நோயளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  அவர்களில் 16 பேர் மன்னார் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட தோட்டவெளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய 9 பேரும் மன்னார் நகர சபை பரிவைச் சேர்ந்தவர்கள். 

 இவர்களில் பனங்கட்டுக்கோட்டைச் சேர்ந்த இருவரும்,சௌத்பார் பகுதியைச் சேர்ந்த இருவரும்,சின்னக்கடை,பெரியகடை,பெற்றா,எமில் நகர்,பள்ளிமுனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஒருவர் வீதம் 9 பேர் இவ்வாறு டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரஜனி அன்ரன் சிசில்,மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வி.ஆர்.சி.லெம்பேட் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள்,செயலாளர்கள்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்,பொது சுகாதார பரிசோதகர்கள்,சுகாதார வைத்திய அதிகாரிகள்,திணைக்களத்தலைவர்கள்,பிரதேசச் செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். 

இதன் போது தேசிய டெங்கு ஒழிப்பு வார நிகழ்வுகள் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் அனுஸ்ரிககப்பட்டு வந்த நிலையில் குறித்த வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட வேளைத்திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. 

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் அனுஸ்ரிக்கப்பட்ட தேசிய டெங்கு ஒழிப்பு வார நிகழ்வின் போது வீடுகள்,மதஸ்தலங்கள்,பாடசாலைகள்,படை முகாம்கள் மற்றும் பொது இடங்களில் சிரமதானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு பாடசாலை மாணவர்கள் மத்தியில்டெங்கு ஒழிப்பு விழிர்ப்புணர்வு நிகழ்வுகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இது குறித்த டெங்கு ஒழிப்பு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 22 தினங்களில் 25 பேர் டெங்கு நோயளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.-Mannar Reviewed by NEWMANNAR on September 23, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.