சட்டமா அதிபர் பாலித பெணாண்டோ மன்னாருக்கு திடீர் விஜயம்-மன்னார் நிலவரம் தொடர்பில் ஆராய்வு-Photo
சட்டமா அதிபர் பாலித பெணாண்டோ திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று புதன் கிழமை (24) மாலை மன்னாருக்கு வருகை தந்தார்.
வருகை தந்த அவர் மன்னார் மோல் நீதிமன்றத்தில் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மஹிந்த பினிதிய,மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம்,மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தினர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் போது சட்டமா அதிபருடன் வடமாகாணத்திற்கு பொறுப்பான குற்றவியல் குடியியல் மேற்பார்வை அதிகாரியும்,நிர்வாக அதிகாரியும் வருகை தந்திருந்தனர்.
வருகை தந்த சட்டமா அதிபர் பாலித பெணாண்டோ அவர்களை மன்னார் அரச சட்டத்தரணி எம்.ஏ.எம்.லாபீர் மற்றும் மன்னார் சட்டத்தரணிகள் மாலை அணிவித்து வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து மன்னார் மேல் நீதிமன்ற கட்டடத்தில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.இதன் போது மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மஹிந்த பினிதிய,மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் மன்னார் சட்டத்தரணிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த கலந்துரையாடலில் மன்னார் நிலவரங்கள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சட்டமா அதிபர் பாலித பெணாண்டோ மன்னாருக்கு திடீர் விஜயம்-மன்னார் நிலவரம் தொடர்பில் ஆராய்வு-Photo
Reviewed by NEWMANNAR
on
September 24, 2014
Rating:

No comments:
Post a Comment