வரட்சியால் 17 இலட்சம் பேர் பாதிப்பு
நாட்டின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவும் வரட்சியினால் 15 மாவட்டங்களைச் சேர்ந்த 17 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
குருணாகல் மாவட்டத்திலேயே அதிகளவிலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குருணாகல் மாவட்டத்தில் 1,10,961 பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாகாண ரீதியில், கிழக்கு மாகாணத்தில் அதிகபட்சமாக 4,12,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
வரட்சியால் 17 இலட்சம் பேர் பாதிப்பு
Reviewed by NEWMANNAR
on
September 24, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 24, 2014
Rating:


No comments:
Post a Comment