அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பெண்கள் தலைமைத்துவ அமைப்பு அமைதி ஊர்வலம்-மகஜர் கையளிப்பு.-Photo,Video


தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரணையுடன்,மன்னார் மாவட்ட 'வளர்பிறை' பெண்கள் தலைமைத்துவ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கிராமிய அபிவிருத்தி பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கோரிய அமைதி ஊர்வலம் இன்று புதன்(24) கிழமை காலை மன்னாரில் இடம் பெற்றது.

மன்னார் பெற்றாவில் அமைந்துள்ள மன்னார் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க அலுவலகத்தில் குறித்த அமைதி ஊர்வலம் ஆரம்பமானது.

குறித்த ஊர்வலமானது மன்னாரில் உள்ள 13 கிராமங்களில் உள்ள பிரச்சினைகள் தொடர்பிலும்,மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அதற்கான தீர்வை பெற்றுத்தருமாறு கோரி குறித்த அமைதி ஊர்வலம் இடம் பெற்றது.

இதே வேளை குறித்த ஊர்வலத்திற்கு பேசாலை மற்றும் வங்காலை மீனவர்களும் ஆதரவு தெரிவித்து குறித்த அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

தடை செய்யப்பட்ட மீன்பிடி தொழில்கள் மேற்கொள்ளப்படுவது தடை செய்ய  வேண்டும் எனவும்,மீன்பிடி திணைக்கள அதிகாரிகள் பக்கச்சார்புடன் நடந்து கொள்ளக்கூடாது என கலந்து கொண்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

இதே வேளை மன்னார் மாவட்டத்தில் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் குறிப்பாக பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும், அரசினால் கிடைக்கப் பெறுகின்ற உதவித்திட்டங்கள் அரசியல் ரீதியாக பாக்கச்சார்புடன் வழங்கப்படுவதாகவும் குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் தொரிவித்தனர்.

குறித்த ஊர்வலம் மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்து அங்கிருந்து மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தனர்.

இதன் போது அவர்களின் கோரிக்கை அடங்கிய மகஜரை மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேலிடம் கையளித்தனர்.

குறித்த ஊர்வலத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் பெனடிக் குரூஸ்,மாவட்ட பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் ஜெரால்ட் மேரி பிரியந்தா,தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வட கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாஸ்,தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடகிழக்கு பெண்கள் திட்ட இணைப்பாளர் ரவினா அசந்தி உற்பட மன்னார் மாவட்ட வளர்பிறை பெண்கள் தலைமைத்துவ அமைப்பின் பிரதி நிதிகள்,மீனவ சங்க பிரதி நிதிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











மன்னாரில் பெண்கள் தலைமைத்துவ அமைப்பு அமைதி ஊர்வலம்-மகஜர் கையளிப்பு.-Photo,Video Reviewed by NEWMANNAR on September 24, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.