மன்னார் மாவட்ட இளைஞர் கழகங்களுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு-Photo
மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் சிறுவர் நிதியமும் இணைந்து மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக 36 இளைஞர் கழகங்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை மாந்தை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி தி.பூலோகராசா தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாணப்பணிப்பாளர் என்.எம்.முனவ்வர்,மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எம்.சிறிஸ்கந்தகுமார், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் இணைப்புச் செயலாளர் எம். முஜாஹீர் சிறுவர் நிதியத்தின் திட்ட உத்தியோகத்தர் ஏ.வின்சன் ஆகியோர் கலந்து கொண்டு இளைஞர் கழகங்களுக்கு காசோலைகளை வழங்கி வைத்தனர்.
ஒரு இளைஞர் கழகத்திற்கு 1 இலட்சம் ரூபாய் வீதம் 36 இளைஞர் கழகங்களுக்கும் 36 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட இளைஞர் கழகங்களுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு-Photo
Reviewed by NEWMANNAR
on
September 22, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 22, 2014
Rating:






No comments:
Post a Comment