அண்மைய செய்திகள்

recent
-

சாதரண தரப் பரீட்சைக்கு ஐந்து இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம்

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதரண தரப் பரீட்சையில் தோற்றுவதற்காக 5 இலட்சத்து 78,135 பேர் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. 

 இவர்களில் 3 இலட்சத்து 70,030 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவிக்கின்றார். 

 பரீட்சை நிலையங்களை ஒதுக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட மேலும் சில விடயங்களின் முதற் கட்ட நடவடிக்கைகளை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி கல்விப் பொதுத்தராதர சாதரண தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளது.
சாதரண தரப் பரீட்சைக்கு ஐந்து இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம் Reviewed by NEWMANNAR on September 22, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.