அண்மைய செய்திகள்

recent
-

தமது நாட்டுப் பிரஜை சிரச் சேதம் செய்யப்பட்டமை அநீதியான நடவடிக்கை-டேவிட் கெமரன்

தமது நாட்டுப் பிரஜை சிரச் சேதம் செய்யப்பட்டமை முற்றுமுழுதான அநீதியான நடவடிக்கை என பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரன் தெரிவித்துள்ளார். டேவிட் ஹேன்ஸ் என்ற பிரித்தானிய பிரஜையை சிரசேதம் செய்வது தொடர்பிலான வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார். 

 தமது நாட்டு பிரஜையை கொலை செய்தவர்களை அழிப்பதற்கு அனைத்து பலத்தையும் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என டேவிட் கெமரன் குறிப்பிட்டுள்ளார்.. உதவிப் பணியாளராக செயற்பட்டு வந்த 44 வயதான டேவிட் ஹேன்ஸ் சிரியாவில் வைத்து கடந்த ஆண்டு கடத்தப்பட்டிருந்தார்.

 ஏற்கனவே ஈராக்கில் நடத்தப்படும் அமெரிக்க விமானத் தாக்குதல்கள் பதில் அளிக்கும் வகையில் அமெரிக்கர்கள் இருவரை ஐ எஸ் கிளர்ச்சியளார்கள் சிரசேதம் செய்திருந்தனர். அத்துடன் மற்றுமொரு பிரித்தானிய பிரஜையை கொல்லப் போவதாகவும் இந்த வீடியோ காட்சி மூலம் ஐ எஸ் கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்
தமது நாட்டுப் பிரஜை சிரச் சேதம் செய்யப்பட்டமை அநீதியான நடவடிக்கை-டேவிட் கெமரன் Reviewed by NEWMANNAR on September 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.