அண்மைய செய்திகள்

recent
-

பதுளையில் ஆசிரியையின் சடலம் தோண்டி எடுப்பு

பதுளை மீதும்பிட்டிய பகுதியில் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் ஆசிரியையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. பதுளை நீதவான் நீதிமன்ற நீதிபதி சுமனா அமரசிங்க மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஹேரத் ஆகியோரின் முன்னிலையில் இன்று பிற்பகல் சடலம் தோண்டி எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

 சடலம் பொலித்தீன் உறைகளால் மூடப்பட்டு புதைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பசறை – கோணகலை பகுதியை சேர்ந்த ஆசிரியை ஒருவரின் சடலமே மீதும்பிட்டிய பகுதியில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரியை கடந்த முதலாம் திகதி காணாமல் போனதாக, அவரின் கணவரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தார். 

 இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகபர் ஒருவரை கைது செய்துள்ளனர். இவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே, குறித்த ஆசிரியை கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 சடலம் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பதுளையில் ஆசிரியையின் சடலம் தோண்டி எடுப்பு Reviewed by NEWMANNAR on September 15, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.