மன்னாரில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்-Photo
டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் நகரசபைக்குற்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்கள் அனைத்திலும் உள்ள 5 ஆயிரம் வீடுகள் இரண்டு நாட்களில் பரிசோதனை செய்து டெங்கு இல்லாத மன்னார் நகரை உருவாக்கும் முதற்கட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை(26) மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுசரணையுடன் குறித்த வேளைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக மன்னார் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் மன்னார் நகரசபைக்குட்பட்ட பகுதிகளிலும், மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் கண்டு பிடிக்கப்பட்டள்ளது.
இந்த நிலையில் கடந்த 22 ஆம் திகதி முதல் நாளை 27 ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் பரிசுத்த பாப்பரசர் மன்னார் மடு தேவாலயத்திற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் வருகைதரவுள்ள நிலையில் மேலதிக விசேட டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் ஒன்று மன்னாரில் மேற் கொள்ளவுள்ள நிலையில் கொழும்பிலிருந்து வருகைதந்துள்ள டெங்கு கட்டுபாட்டு திணைக்கள பணிப்பாளரின் தலைமையிலான குழுவினர் குறித்த திட்டத்தை முன்னேடுத்து வருகின்றனர்.
குறித்த திட்டத்திற்கு இராணுவம்,பொலிஸ்,கடற்படை சேர்ந்த 150 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முதற்கட்டமாக இன்று வெள்ளிக்கிழமை (26) மன்னார் நகர சபைக்குற்பட்ட பிரிவில் ஐந்து பிரிவுளான பிரிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள வீடுகளில் டெங்கு ஒழிப்பு பணிகள் இடம் பெற்று வருகின்றது.
வீடுகளுக்குச் செல்லும் குறித்த குழுவினர் வீடுகளில் டெங்கு நுளம்பு பெருகும் சந்தர்ப்பம் உள்ளதா,இல்லையா என்பவற்றை பார்வையிடுகின்றனர். நாளை சனிக்கிழமை (27) ஏனைய பகுதிகளிலும் குறித்த வேலைத்திட்டம் இடம் பெறும்.
பொலிஸ், இராணுவம், கடற்படையுடன் இணைந்து பொது சுகாதார உத்தியோகஸ்தர்கள், தன்னார்வு தொண்டர்கள் மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள்,பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளடங்கலாக சுமார் 300 பேர் டெங்கு ஒழிப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.றோய் பீரிஸ் தெரிவித்தார்.
மன்னாரில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்-Photo
Reviewed by NEWMANNAR
on
September 26, 2014
Rating:

No comments:
Post a Comment