மன்னார் பொது வைத்தியசாலையில் தாய்மார் குழந்தைகளுக்கு பாலூட்டும் நிலையம் திறந்து வைப்பு-Photo
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தரும் தாய்மார் தங்களது குழந்தைகளுக்கு மறைமுகமாக இருந்து பாலூட்டும் குறையை தீர்த்து வைக்கும் நோக்குடன் மன்னார் பொது வைத்தியசாலையில் உலக தரிசன நிறுவனத்தின் நிதியுதவியுடன் தாய்மார் குழந்தைகளுக்கு பாலூட்டும் நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுமார் நான்கு இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ் நிலையத்தை நேற்று வெள்ளிக்கிழமை (26) காலை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி றஜனி அன்ரனி சிசில் அவர்களால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இவ் நிகழ்வின் போது மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி வீ.ஆர்.சீ.லெம்பேட் மன்னார் உலக தரிசன நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் ஐயபாலன்,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நிர்வாக அலுவலகர் ஏ.எஸ்.எம்.சஜானி உற்பட பல முக்கியஸதர்களும் கலந்து கொண்டனர்.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி றஜனி அன்ரனி சிசில் இவ் நிலையத்தை திறந்து வைத்த பின் அங்கு உரையாற்றுகையில்,,,
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முக்கிய தேவைகள் ஏற்படுகின்ற போது உலக தரிசன நிறுவனமும் பி.எஸ்.எல். நிறுவனம் ஆகியவை எமக்கு உதவி செய்வதில் பின் நிற்பதில்லை. அந்த வகையில் நாம் அனைவரும் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.
அத்துடன் மன்னார் வைத்தியசாலைக்கு குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் கடந்த காலங்களில் தங்கள் குழந்தைகளுக்கு மறைமுகமாக இருந்து பாலூட்டுவதில் அசௌரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.
ஆனால் தற்பொழுது அவ் குறை தீர்வதற்கு வழி பிறந்தள்ளது. இதற்காக உழைத்த மன்னார் பொது வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்திய கலாநிதி வீ.ஆர்.சீ.லெம்பேட் அவர்களுக்கும் நாம் பாராட்டு தெரிவிக்க கடமைபட்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் பொது வைத்தியசாலையில் தாய்மார் குழந்தைகளுக்கு பாலூட்டும் நிலையம் திறந்து வைப்பு-Photo
Reviewed by NEWMANNAR
on
September 27, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 27, 2014
Rating:





No comments:
Post a Comment