அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணத்தில் 551 பேருக்கு அரச நியமனங்கள்

யாழ். மாவட்டத்தில் 551 பேருக்கு அரச நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. உயர் தொழில்நுட்ப கணக்கியல், வர்த்தக முகாமைத்துவ பட்டப்படிப்பை நிறைவுசெய்துள்ள 423 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவிக்கின்றார். 

 அரச திணைக்களங்களில் ஒரு வருடகால பட்டதாரி பயிலுனராக இவர்கள் நியமனம் பெற்றுள்ளநிலையில், பயிற்சிக் காலத்தின் பின்னர் சேவையில் நிரந்தரமாக்கப்படுவார்கள் எனவும் அரசாங்க அதிபர் கூறினார். இதேவேளை, கிராம சேவையாளர் உத்தியோகஸ்தர் பதவியில் பயிற்சியை நிறைவுசெய்த 95 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

 மேலும், யாழ். மாவட்டத்திற்கான கிராம சேவையாளர் உத்தியோகஸ்தர் பதவிக்கு 33 புதிய பயிலுனர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட்டதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் குறிப்பிடுகின்றார். யாழ். மாவட்ட செயலகத்தில் இவர்களுக்கான நியமன கடிதங்கள் நேற்று வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ்ப்பாணத்தில் 551 பேருக்கு அரச நியமனங்கள் Reviewed by NEWMANNAR on October 09, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.