சென்னை பொலிஸ் நிலையம் முன்பாக நடிகை தற்கொலை முயற்சி
சென்னை பொலிஸ் நிலையம் முன்பாக தற்கொலை செய்ய முயன்ற நடிகை மாயாவை பொலிஸார் கைது செய்ததோடு, அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் மாயா. இவர் நேற்று மதியம் 12 மணியளவில் வேப்பேரியில் உள்ள சென்னை மாநகர பொலிஸ் அலுவலகத்துக்கு முன்னால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் நிலையத்திற்கு வந்த அவரை சோதனைக்கு உட்படுத்திய சந்தர்பத்தில் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தே இவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக சென்னை பொலிஸாரை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னை பொலிஸ் நிலையம் முன்பாக நடிகை தற்கொலை முயற்சி
Reviewed by NEWMANNAR
on
October 09, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 09, 2014
Rating:


No comments:
Post a Comment