அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அடம்பன் தூய வியாகுல மாதா ஆலய கட்டிட வேலைக்கு நிதி வழங்கினார் அமைச்சர் டெனிஸ்வரன்.-Photo

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் தூய வியாகுல மாதா ஆலயத்தின் கட்டிட நிதிக்கு வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் குறித்தொதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து ஒரு தொகை நிதியினை இன்று வெள்ளிக்கிழமை(10) வழங்கி வைத்தார். 

 அக்கிராம மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அடம்பன் பங்குத் தந்தை அருட் தந்தை நியூட்டன் அவர்களிடம் குறித்த நிதியை வழங்கினார். இதன்போது மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளர், மாவட்ட பொறியியலாளர், வட மாகாண உள்ளூராட்சி செயலாளர் எஸ். திருவாகரன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 



மன்னார் அடம்பன் தூய வியாகுல மாதா ஆலய கட்டிட வேலைக்கு நிதி வழங்கினார் அமைச்சர் டெனிஸ்வரன்.-Photo Reviewed by NEWMANNAR on October 11, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.