மன்னார் எழுத்தூர் பெரியகமம் பகுதியில் உள்ள வீட்டு காணியில் காணப்பட்ட வேப்பை மரத்தில் இருந்து பால் வடியும் அதிசய காட்சி.-Photo,Video
மன்னார் எழுத்தூர் பெரியகமம் பகுதியில் உள்ள வீட்டு காணியில் காணப்பட்ட வேப்பை மரத்தில் இருந்து தொடர்ச்சியாக பால் வடியும் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வேப்பை மரத்தில் இருந்து கடந்த 5 தினங்களுக்கு முன் மரத்தின் தண்டுப்பகுதியில் இருந்து பல இடங்களில் இருந்தும் பால் வடிய ஆரம்பித்தது.
இந்த நிலையில் தற்போது வேப்பை மரத்தில் இருந்து பல பகுதிகளில் இருந்தும் தொடர்ச்சியாக அதிகளவான பால் வடிந்து கொண்டிருக்கின்றது.
மக்கள் சென்று பார்வையிட்டு வருவதோடு பால் வடியும் பகுதியில் போத்தல்களை வைத்து பாலை எடுத்துச் செல்லுகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார் எழுத்தூர் பெரியகமம் பகுதியில் உள்ள வீட்டு காணியில் காணப்பட்ட வேப்பை மரத்தில் இருந்து பால் வடியும் அதிசய காட்சி.-Photo,Video
Reviewed by NEWMANNAR
on
October 01, 2014
Rating:

No comments:
Post a Comment