ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற முயற்சி
பெங்களூர் மத்திய சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமை, தமிழக சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த முயற்சிக்கு கர்நாடகா மாநில அரசும் ஒப்புதல் அளித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட ஜெயலலிதா ஜெயராமிற்கு நான்காண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அவர் பார்ப்பன அக்ரஹார மத்திய சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தை மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினையாக மாற்றுவதற்கு அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முயற்சிப்பதால், ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டுமென இந்திய முன்னாள் பிரதமர் தேவ கவுடா தெரிவித்திருந்தார்.
தமிழக அரசும், ஜெயலலிதா ஜெயராமும் இந்த கோரிக்கையை முன்வைத்தால், அது குறித்து பரிசீலனை செய்ய முடியுமென கர்நாடக சிறைத்துறைக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ஜெ.சிங்ஹா கூறியிருந்தார்.
இதேவேளை, ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றுவது தொடர்பில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, முன்னாள் முதல்வரை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டுமென முடிவு எடுக்கப்பட்டு, ஜெயலலிதாவுக்கு அதுதொடர்பில் அறிவிக்கப்பட்டதாக தி ஹிந்துவின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா ஜெயராமின் ஆலோசனைக்கு அமைய, இந்த விடயம் தொடர்பில் தமிழக அரசு சட்ட நிபுணர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற முயற்சி
Reviewed by NEWMANNAR
on
October 14, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 14, 2014
Rating:


No comments:
Post a Comment