அண்மைய செய்திகள்

recent
-

இழுவை மடி தொழில் முறை தடை செய்யப்பட்டுள்ளமை நியாயமானது-மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தலைவர் என்.எம்.ஆலம்.


இழுவை மடித்தொழில் முறையாக  தடைசெய்யப்பட்டுள்ளது நியாயமானது.ஆனால் இழுவைப்படகுகள் மூலமான தொழில்கள் தடை இல்லை.மீனவர்கள் இத்தொழில் முறையை கைவிட்டு மாற்றுத்தொழில் முறைக்கு மாறவேண்டும் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,

வல்வெட்டித்துறை கிழக்கு கிராமிய மீனவர் அமைப்பினரின் இழுவைப் படகு தொழிலை தடை செய்ய வேண்டாம் எனும் தொனியிலான போராட்டத்தின் நியாயத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

ஏனெனில் இத் தொழிலானது கடல் வளத்தையும் மீன் இனங்கள் வாழும் கற்பாறைகள் மற்றும் கடற் தாவரங்களையும் அழிக்க கூடிய இழுவை மடியினை கொண்ட கடல் சூழலுக்கு முற்றிலும் பொருந்தாத ஒரு தொழில் முறையாகும்.

இழுவைப்படகில் பயன்படுத்தப்படும் இழுவை மடி வலையின் அடிப்பகுதி மிகவும் குறுகிய இலைகளை கொண்ட கண்ணியாகும்.

 மேலும் இவ் மடி வலையின் இரு பகுதிகளிலும் பயன்படுத்தப்படும் இரண்டு இரும்புச் சட்டம் பொருத்தப்பட்ட பலகை ஒவ்வொன்றும் சுமார் 50 கிலோவுக்கு மேற் கொண்ட எடையைக் கொண்டது. 

இவ்வலையுடன் கடலில் இறக்கப்பட்டவுடன் கடலில்; நிலற்பகுதியில் இரண்டுஅங்குலத்துக்கும் மேலான நிலத்தை வராண்டி அனைத்து விதமான கடற் தாவரங்கள், அதில் தங்கியுள்ள மீன் முட்டைகள், கடல் வாழ் உயிரினங்கள், சிறிய மீன் இனங்கள் என அனைத்துமே அழிக்கப்படுகின்றன.

 ஒரு படகின் மூலம் மணித்தியாலத்துக்கு 10 அடி அகலமும் 1000 அடி நீளமும் கொண்ட கடற் பகுதியை வெறுமையாக்கப்படுகின்றது.

மேலும் இத்தொழில் ஆழ மற்ற, ஆழமான கடற்பகுதியில் வருடம் முழுவதும் செய்யப்படுவதால் எண்ணிப்பார்க்க முடியாத அளவு கடல வளம் அழிக்கப்படுகின்றது.

 இதனை மீனவர்கள் உணர்ந்ததால் இத் தொழில் முறைக்கு தடை விதிக்குமாறு அரசுக்கு பரிந்துறை செய்யப்பட்டதன் பொருட்டு இத் தொழிலை அரசு தடை செய்துள்ளது.

இத் தொழிலானது மன்னாரில் ஒரு சிலராலும் தென் பகுதி மீனவர்கள் சிலாரலும் செய்யப்படுவது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை.

இத்தொழிலை மேற்கொள்ளுபவர்கள் இதனைத் தங்களுக்கு ஏற்ற வகையில் நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசின் ஆணையை நடைமுறைபடுத்த வேண்டிய திணைக்களமும் அதன் அதிகாரிகளும் இதனை நிறுத்த நடவடிக்கை மேற் கொள்ளாமல் அசட்டையாக உள்ளதே இதற்கான காரணமாகும்.

எமது கடல் வளம் அழிக்கப்படுமானால் அது அனைவராலும் தடுக்கப்பட வேண்டும்.

யுத்தத்தினால் அழிந்து போன நிலத்தையும் இழுவை மடியினால் அழிந்த கடலினையும்  நாம் எமது எதிர்கால சந்ததிக்கு விட்டு வைக்கப்போகின்றோம் என்பதனை இத் தொழிலை நியாயப்படுத்து வோர் சிந்திக்கவேண்டும்.

200 படகுகளுக்காக இத்தொழிலை அனுமதிக்குமாறு கோரும் இவர்கள் அது சாத்தியமாகும் பட்சத்தில் இதன் தாக்கம் எவ்வளவு தூரம் இக்கடற்பரப்பில் படகுகளின் எண்ணிக்கையை கூட்டும் என்பதினை நாம் கூறத்தேவை இல்லை.

மாகாண அரசும் மாகாண சபை உறுப்பினர்களும் கடல் வளத்தை அழிக்கும் இத்தொழிலுக்கு துணை நின்று சிறு மீனவர்களின்  வாழ்வாதாரத்தை அழித்து விடாதீர்கள்.

இவ் இழுவைப்படகின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தின் மீனவர்கள் தற்போது தூண்டில்கள் மூலம் மீன் பிடிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.எனவே
இழுவைமடி வலைகள் தடையே தவிர இழுவை படகுகளின் தொழில் முறைகள் தடை இல்லை.

என்பதை இம் மீனவர்களும் இவர்களின் வாழ்வாதரத்திற்கு அக்கறையுடன் குரல் கொடுக்கும் அரசியல் பிரமுகர்கள் சமூகப்பற்றுள்ளவர்களும் இவர்களுக்கான மாற்று தொழில் முறைக்கு போதிய இழப்பீட்டினை அரசின் ஊடாக அல்லது அரசு சார்பற்ற நிறுவனம் அல்லது மாகாண அரசின் ஊடாக பெற்று வழங்குவதுடன் இவ் இழுவை மடி தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய தொழில் முறைக்கு இவர்களை ஊக்குவித்து எமது எதிர்கால சந்ததிக்கும் இக்கடல் வளத்தை பாதுகாத்து வைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். 
இழுவை மடி தொழில் முறை தடை செய்யப்பட்டுள்ளமை நியாயமானது-மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தலைவர் என்.எம்.ஆலம். Reviewed by NEWMANNAR on October 09, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.