தலைமன்னார் அ.த.க.பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள்-Photo
தலைமன்னார் அ.த.க.பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள் இன்று 09.10.2014 வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஆசிரியர் தினமான ஒக்டோபர் 06ம் திகதி பாடசாலை விடுமுறை விடப்பட்டிருந்தமையால் இந்நிகழ்வு இன்று எமது பாடசாலையில் கொண்டாடப்பட்டது.
காலை இறை வணக்கத்தினைத் தொடர்ந்து ஆசிரியர்களின் பணியை பாராட்டி வாழ்த்துக்களும் நினைவுப் படிகங்களும் மலர்செண்டுகளும் வழங்கப்பட்டது. பின்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மைதான நிகழ்வுகள் இடம்பெற்றன.
கிரிக்கட் , நீர் நிரப்புதல் போன்ற விளையாட்டுக்களும் நடாத்தப்பட்டன. முடிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பின் போது ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும் மாணவர்களுக்கு நன்றிகளையும் கூறிய பாடசாலையின் அதிபர் திரு.செ.செல்வரஞ்சன் இது போன்ற நிகழ்வுகளை பாடசாலைகளில் நடாத்துவதால் ஆசியர்கள் மாணவர்களுக்கு இடையில் ஒற்றுமை நிலைநிறுத்தப்படும் எனவும் புரிந்துணர்வு அதிகமாகும் எனவும் கூறினார்.
தலைமன்னார் அ.த.க.பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள்-Photo
Reviewed by NEWMANNAR
on
October 09, 2014
Rating:

No comments:
Post a Comment