அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மீனவர்கள் கண்டன ஊர்வலம்.-Photo


கடற்தொழில் அமைச்சர் ராஜித சேனாரத்தின அவர்களின் பதவி விலகலை  கண்டித்தும்,தென்பகுதியில் கடற்தொழில் அமைச்சருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அநீதிகளை கண்டித்து மன்னார் மாவட்ட மீனவர்கள் கண்டன ஊர்வலம் ஒன்றை இன்று(10) திங்கட்கிழமை காலை மன்னாரில் நடாத்தினர்.

மன்னார் மாவட்ட மீனவ கடற் தொழில் சம்மேளனமும்,மன்னார் மாவட்டத்தில் உள்ள கிராமிய அமைப்புக்கள் அனைத்தும் இணைந்து குறித்த கண்டன ஊர்வலத்தை மேற்கொண்டனர்.

குறித்த ஊர்வலம் காலை 10 மணியளவில் மன்னார் பஸார் பகுதியில் ஆரம்பமாகி மன்னார் நீதிமன்ற வீதியூடாக அமைதியாக சென்று பின் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்தை சென்றடைந்தது.

இதன் போது நூற்றுக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டு பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் மீனவர்கள் சார்பாக மன்னார் மாவட்ட கிராமிய கடற்தொழில் சம்மேலனத் தலைவர் ஏ.ஜஸ்ரின் சொய்சா வழங்கி வைத்தார்.

கடற்தொழில் அமைச்சர் ராஜீத சேனாரத்தின மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வரும் வகையிலும்,சிறுபான்மையின மக்களுக்காக குரல் கொடுத்து வரும் வகையில் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அநீதியான செயற்பாடுகளை தாம் கண்டிப்பதாக மன்னார் மாவட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.








மன்னாரில் மீனவர்கள் கண்டன ஊர்வலம்.-Photo Reviewed by NEWMANNAR on November 10, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.