10 கோடி ரூபா செலவில் இங்கிலாந்து பாராளுமன்ற சதுக்கத்தில் காந்தி சிலை
இங்கிலாந்து பாராளுமன்ற சதுக்கத்தில் ரூ.10 கோடி செலவில் காந்தி சிலை அமைக்கப்படுகிறது.
நமது நாட்டின் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சிலை திறக்கப்பட உள்ளது. இந்த சிலை இங்கிலாந்து பாராளுமன்ற சதுக்கத்தில் அமைக்கப்படுகிறது.
இந்த சிலையின் வடிவம் பொது மக்கள் பார்வைக்காக நேற்று திறக்கப்பட்டது. தற்போது களிமண்ணால் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலை வெண்கலத்தில் வார்க்கப்படுகிறது.
இச்சிலை ரூ.10 கோடி செலவில் (1 மில்லியன் பவுண்டு) வடிவமைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை லண்டன் வாழ் இந்திய தொழில் அதிபர் மேக்நாத் தேசாய் உள்பட பலர் செய்து வருகின்றனர்.
பொதுவாக தடி ஊன்றிய காந்தி சிலைதான் வைக்கப்படுகிறது. ஆனால் இங்கு அது போன்று இல்லாமல் 1931–ம் ஆண்டு லண்டனுக்கு வந்த போது 10 டவுனிங் தெருவில் பிரதமர் அலுவலகம் முன்பு எடுக்கப்பட்ட போட்டோவில் இடம்பெற்றுள்ள அவரது முழு உருவ தோற்றம் கொண்ட சிலை வடிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து காந்தி நாடு திரும்பிய தன் 150–வது ஆண்டு விழாவை முன்னிட்டு லண்டனில் இச்சிலை திறக்கப்படுகிறது.
10 கோடி ரூபா செலவில் இங்கிலாந்து பாராளுமன்ற சதுக்கத்தில் காந்தி சிலை
Reviewed by NEWMANNAR
on
November 11, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 11, 2014
Rating:


No comments:
Post a Comment