தமிழ் அகதிகளை இலங்கைக்குத் திருப்பியனுப்ப வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை
இந்தியாவில் வசிக்கும் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பவும், அவர்கள் தங்கள் சொந்த மண்ணில் அனைத்து உரிமைகளுடன் வாழவும் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் சிவில் உரிமைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை சென்றிருந்த விக்னேஸ்வரன், நேற்று (10) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
இந்தியாவின் தலையீடு இல்லாமல் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதை உறுதியாக நம்புகிறோம். புதிதாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இலங்கைத் தமிழர்களின் இன்னல்களைப் போக்க உதவும் என்ற நம்பிக்கை உள்ளது.
இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழர்களின் நிலம் தமிழர்களுக்கே கிடைத்து, அவர்களுக்கு கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகள் தடையின்றிக் கிடைக்க வேண்டும். இந்த நிலை ஏற்பட்டால் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஏராளமானோர் மீண்டும் இலங்கைக்கே திரும்பி விடுவர்.
இவ்வாறு விக்னேஸ்வரன் கூறினார்.
தமிழ் அகதிகளை இலங்கைக்குத் திருப்பியனுப்ப வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை
Reviewed by NEWMANNAR
on
November 11, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 11, 2014
Rating:


No comments:
Post a Comment