பாகிஸ்தானில் பஸ் விபத்து; 58 பேர் பலி -Video
பாகிஸ்தானின் தென் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 58 பயணிகள் உயிரிழந்துள்ளனர்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கைராபுர் பகுதியில் பயணிகள் பஸ்ஸொன்று ட்ரக் வண்டியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் அடங்குவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 10ற்கும் மேற்பட்டோர் குறித்த விபத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
கடும் மூடுபனி காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பாகிஸ்தான் பொலிஸார் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் பஸ் விபத்து; 58 பேர் பலி -Video
Reviewed by NEWMANNAR
on
November 11, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 11, 2014
Rating:


No comments:
Post a Comment