மன்னாரில் இளம் யுவதி தற்கொலை-கடமையாற்றும் வர்த்தக நிலையத்தில் இருந்து தாமதித்த நேரத்திற்கு வீட்டிக்குச் சென்றமையே காரணம்
மன்னார் நகர சபை பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலைய கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் பல மாதங்களாக கடமையாற்றி வந்த யுவதி ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை காலை (14-11-2014) மன்னார் எழுத்தூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.
உயிரிழந்த யுவதி மன்னார் எழுத்தூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 18 வயது மதிக்கத்தக்கவராக உள்ளார். இவர் கடமையாற்றும் குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்து நாளந்தம் இரவு 8.30 மணிக்கு பின்பே வீடு திரும்புவதாக அறிய முடிகின்றது.
தனது பிள்ளை தாமதித்த நேரத்திற்கு வீட்டிற்கு வருகின்றமையினை பெற்றோர் கண்டித்துள்ளனர். நேரத்துடன் வீட்டிற்கு வருமாறு பெற்றோர் கூறியுள்ளனர்.எனினும் குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் எதனையும் பொருட்படுத்தாது தாமதித்த நேரத்திற்கே குறித்த யுவதியை வீடு செல்ல அனுமதிக்கின்றார்.இதனால் கோபமடைந்த பெற்றோர் குறித்த யுவதியை கண்டித்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை காலை இனி கடைக்கு போக வேண்டாம் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையிலே மனதால் பாதிக்கப்பட்ட குறித்த யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் பஸார் பகுதி உட்பட மன்னார் நகர பகுதியில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் பெண்கள் அதிக அளவில் கடமையாற்றுகின்றனர்.ஒரு சில வர்த்தக நிலைய உரிமையாளர்கள் பெண்களை மாலை 5.30 மணியுடன் வீடு செல்ல அனுமதிக்கின்றனர்.
ஆனால் பல வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வர்த்தக நிலையங்கள் மூடும் வரை பெண்களை வீடு செல்ல அனுமதிப்பதில்லை என பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.இரவு 8 மணிவரை சில வர்த்தக நிலையங்களில் பெண்கள் கடமையாற்றுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் பெண்களை மாலை 5.30 மணியுடன் வீடு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும்,இவ்விடயத்தில் மன்னார் வர்த்தக சங்கம்,பெண்கள் அமைப்புக்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் இளம் யுவதி தற்கொலை-கடமையாற்றும் வர்த்தக நிலையத்தில் இருந்து தாமதித்த நேரத்திற்கு வீட்டிக்குச் சென்றமையே காரணம்
Reviewed by NEWMANNAR
on
November 15, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 15, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment