அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தை ஒருவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது.



மன்னார் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(14) வழக்கு விசாரணைகளுக்காக சென்று விட்டு வெளியில் வந்த மன்னார் பனங்கட்டுக்கோட்டு கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை வவுனியாவில் இருந்து வருகை தந்த பயங்கரவாத புலனாய்வுத்துறையினர் கைது செய்து வவுனியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக அவரது மனைவி தெரிவித்தார்.

மன்னார் பனங்கட்டுக்கோட்டு கிராமத்தைச் சேந்த 5 பிள்ளைகளின் தந்தையான தங்கத்துரை ஜெயின்ஸ் (வயது-38) என்பவரே கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி தெரிவித்தார்.

தனது கணவருக்கு மன்னார் நீதிமன்றத்தில் பிறிதொரு வழக்கு விசாரணை  ஒன்று இடம் பெற்று வருகின்றது.குறித்த வழக்கு விசாரணைக்காக அவர் நேற்று வெள்ளிக்கிழமை(14) காலை மன்னார் நீதிமன்றத்திற்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்காக நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்த போது வெளியில் காத்து நின்ற பயங்கரவாத புலனாய்வுத்துறையினர் அவரை கைது செய்து வவுனியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக அவரது மனைவி தெரிவித்தார்.

தனது கணவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாகவும்,அவருக்கு புனர்வாழ்வு வழங்க வேண்டும் என தனது கணவரை கைது செய்த பயங்கரவாத புலனாய்வுத்துறையினர் தொலைபேசியில் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.

தனது கணவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பே புலி இயக்கத்தில் இணைந்திருந்தார்.பின் திருமணம் முடித்து தற்போது குடும்ப வாழ்வில் ஈடுபட்டு வரும் நிலையிலே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது மனைவி மேலும் தெரிவித்தார்.
மன்னாரைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தை ஒருவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது. Reviewed by NEWMANNAR on November 15, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.