மன்னார் மீனவர்களின் படகுகள் பல நீரில் மூழ்கியது.-Photos
மன்னார் நகர் பகுதியில் கடல் பெருக்கெடுத்ததன் காரணத்தினால் மீனவர்களின் படகுகள் கடல் நீரில் மூழ்கியுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மன்னார் பெரிய பாலத்தடி மற்றும் மன்னார் மீன் சந்தை ஆகிய பகுதிகளில் உள்ள கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல படகுகள் கடல் நீரில் மூழ்கியுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கடல் நீர் வேகமாக கிராமங்களுக்குள் உற் சென்றது.இதன் போது கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் பல படகுகள் நீரில்; மூழ்கியுள்ளது.
-இது மட்டுமின்றி கடற்கரையோரத்தில் அமைந்துள்ள மீனவர்களின் வாடிகளும் நீரில் மூழ்கியுள்ளது.இந்த நிலையில் அதிகமான மீனவர்கள் இன்று காலை தொழிலுக்குச் செல்ல வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் மீனவர்களின் படகுகள் பல நீரில் மூழ்கியது.-Photos
Reviewed by NEWMANNAR
on
November 28, 2014
Rating:

No comments:
Post a Comment