தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையை கட்டி எழுப்புங்கள் அபிவிருத்திகளோடு நாங்கள் வருகின்றோம்.பா.டெனிஸ்வரன்.-photo
தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையை கட்டி எழுப்புங்கள் அபிவிருத்திகளோடு நாங்கள் வருகின்றோம் என வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
மன்னார் தாராபுரம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தாய் சேய் சுகாதார நிலையம் திறப்பு விழா நேற்று வியாழக்கிழமை(13) வெகு விமர்சையாக இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனின் அழைப்பின் பேரில் கலந்து கொண்ட வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவ்வாறு தெரிவித்தார்.
குறித்த திறப்பு விழா நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் அல்ஹாஜ் ரிப்கான் பதியுதீன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி சிசில்,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ரூபன் லெம்பேட்,மற்றும் கிராமத்தலைவர்கள் கிராம மக்கள் வைத்தியர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையை கட்டி எழுப்புங்கள் அபிவிருத்திகளோடு நாங்கள் வருகின்றோம்.பா.டெனிஸ்வரன்.-photo
Reviewed by NEWMANNAR
on
November 14, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 14, 2014
Rating:






No comments:
Post a Comment