அண்மைய செய்திகள்

recent
-

அச்சமடைந்த வாக்காளர்கள் வேறு நிலையங்களில் வாக்களிக்கலாம் – தே.தி

தமக்கான வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பது தொடர்பில் அச்சமடைந்துள்ள வாக்காளர்கள், வேறு வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க முடியும் என தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.

ஜனாதிபதியை தெரிவுசெய்வது தொடர்பிலான சட்டத்தின் 119 ஆ சரத்துக்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேர்தல்கள் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக விண்ணப்பங்களை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தெரிவத்தாட்சி அலுவலகங்கள், பிரதேச செயலகம் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை இந்த மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் செயலகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சமடைந்த வாக்காளர்கள் வேறு நிலையங்களில் வாக்களிக்கலாம் – தே.தி Reviewed by NEWMANNAR on November 25, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.