ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்
ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை வாரத்தின் அலுவலக நேரங்களில் காலை 8.30 முதல் மாலை 4.15 வரை கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
சகல வேட்பாளர்களிடம் இருந்தும் வேட்பு மனு பெற்றுக்கொள்வதற்கு முன்னர் கட்டுப்பணம் செலுத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியற்கட்சியின் வேட்பாளர் ஒருவர் 50,000 ரூபாவும் ஏனைய அரசியற் கட்சிகளின் வேட்பாளர்கள் 75,000 ரூபாவும் கட்டுப்பணமாக செலுத்தப்பட வேண்டும்.
அங்கீகரிக்கப்படாத அரசியற்கட்சி வேட்பாளர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதனை பாராளுமன்ற
பொதுச் செயலாளர் ஊடாக கடிதம் ஒன்றின் மூலம் உறுதி செய்யப்படுவது கட்டாயம் என தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்காக ஜனசெத முன்னணியின் வேட்பாளராக அந்தக் கட்சியின் தலைவர் பத்தரமுல்லே சீலரதன தேரர் இன்று மாலை தனது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்
Reviewed by NEWMANNAR
on
November 25, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 25, 2014
Rating:

No comments:
Post a Comment