உலகின் அதிபயங்கர பெண் தீவிரவாதி 'ஒயிட் விடோ' சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள்
உலகின் அதிபயங்கர பெண் தீவிரவாதி, உக்ரைன் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகின் அதிபயங்கர பெண் தீவிரவாதியான 'ஒயிட் விடோ' என்ற சமந்தா லெவ்த்வெயிட் 2 வாரங்களுக்கு முன் உக்ரைன் சென்று அங்கு அரசுக்கு ஆதரவான படையில் சேர்ந்து, குறி பார்த்து சுடும் வீராங்கனையாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது நடந்த சண்டையில், இவரை குறி பார்த்து சுடுவதில் வல்லவரான ரஷிய வீரர் ஒருவர் சுட்டுக்கொன்று விட்டதாக இப்போது ஊடகத்தகவல்கள் கூறுகின்றன. ரஷியாவுக்கு எதிரானவர்களுடன் இணைந்து சண்டையிடுவதற்கு சமந்தா, உக்ரைன் சென்றது உண்மையென்றால், அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற தகவல், நம்பத்தகுந்ததாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, சமந்தாவை சுட்டுக்கொன்ற ரஷிய வீரரின் தலைக்கு 6 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர் (ரூ.3 கோடியே 78 லட்சம்) பரிசாக வழங்கப்படும் என உக்ரைன் சிறப்பு பணிகள் பிரிவு அறிவித்துள்ளது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமந்தா சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதாக வெளியான தகவல் குறித்து இங்கிலாந்தில் உள்ள அவரது தந்தையும், முன்னாள் படை வீரருமான ஆண்ட்ரூ லெவ்த்வெயிட்டிடம் கேட்டபோது அவர், நான் எதையும் கேள்விப்படவில்லை. யாரும் என்னிடம் எதையும் சொல்லவில்லை. நானும் எதையும் கூறப்போவதில்லை என்றார். இருப்பினும் சமந்தா சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதாக வெளியான தகவலை உக்ரைன் மறுத்துள்ளது.
2011-ம் ஆண்டு, ஆப்பிரிக்க நாடான கென்யாவில், மாம்பசா என்ற இடத்தில் ஓடடல்களையும், வணிக மையத்தையும் தகர்க்க முயன்ற குற்றச்சாட்டுக்கு 'ஒயிட் விடோ' ஆளானவர். மேலும், அந்த நாட்டின் தலைநகரான நைரோபியில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ந் தேதி வெஸ்ட்கேட் வணிக வளாகத்தில் 67 பேர் கொன்று குவிக்கப்பட்ட அல் ஷகாப் தீவிரவாதிகளின் தாக்குதல்களில் மூளையாக செயல்பட்டவர், அந்த இயக்கத்தின் தளபதியாகவும் விளங்கியவர் என கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களை தொடர்ந்து சமந்தாவை உலகின் அதிபயங்கர பெண் தீவிரவாதியாக இன்டர்போல் என்னும் சர்வதேச போலீஸ் அறிவித்து, தேடி வந்தது.
லண்டன் நகரில் 2005-ம் ஆண்டு ஜூலை மாதம், 7-ந் தேதி சுரங்க ரெயில்களில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைப் படை தாக்-குதல்களில் மூளையாக செயல்பட்டவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தீவிரவாதி ஜெர்மைன் லிண்ட்சேதான், இந்த சமந்தாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தா லெவ்த்வெயிட் சிரியா சென்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் உள்ள பெண்களுக்கு தற்கொலை தாக்குதல் குறித்து பயிற்சி அளித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினத்தந்தி
உலகின் அதிபயங்கர பெண் தீவிரவாதி 'ஒயிட் விடோ' சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள்
Reviewed by NEWMANNAR
on
November 14, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 14, 2014
Rating:


No comments:
Post a Comment