கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி இருவர் காயம்
கிளிநொச்சி, கரடிப்போக்கு ரயில் கடவையில் கெப் வாகனமொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றதாக கிளிநொச்சி ரயில் நிலைய பேச்சாளர் ஒருவர் கூறினார்.
ரயில் கடவையில் பாதுகாப்பு மணி ஒலிக்கச் செய்யப்பட்ட போதிலும், கெப் வாகனம் ரயில் கடவையைத் தாண்டி பயணிக்க முற்பட்டபோது ரயில் எஞ்சினுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் கெப் வாகனத்தில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
எவ்வாறாயினும், கரடிப்போக்கு ரயில் கடவை பாதுகாப்பற்ற முறையில் காணப்படுவதாகவும், அந்த இடத்தில் ரயில் விபத்துகள் ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாகவும் செய்தியாளர் சுட்டிக்காட்டுகின்றார்.
கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி இருவர் காயம்
Reviewed by NEWMANNAR
on
December 19, 2014
Rating:

No comments:
Post a Comment