கறுப்பின இளைஞர்களின் மரணம் தொடர்பான வழக்கின் தீர்ப்புகள் அதிருப்பதி அளிக்கின்றன – ஐ.நா
அமெரிக்காவில் இரு கறுப்பினத்தவர்களின் மரணம் தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை அதிருப்தியடைந்துள்ளது.
கறுப்பினத்தவரகளின் மரணத்துடன் தொடர்புடைய வெள்ளையின பொலிஸார் மீது அமெரிக்க ஜூரிகள் குற்றச்சாட்டுபதிவு செய்யாமை, சட்டத்த்தின் வலு குறித்த கவலைகளை தோற்றுவிப்பதாக ஐநாவின் சிறுபான்மையின பிரச்சினை தொடர்பான விசேட அதிகாரி ரிட்டா இஸ்ஸாக் தெரவித்துள்ளார்.
அமெரிக்காவின் மிசோரி மற்றும் நிவ்யோர்க்கில் இரண்டு கறுப்பின இளைஞர்களின் மரணத்துடன் தொடர்புடைய பொலிஸார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படாமையினால் அந்நாட்டில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன
ஆபிரிக்க அமெரிக்கர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் இனப் பாகுபாட்டினாலேயே பொலிஸார் பாராபட்சமான முறையில் நீதியை கையாள்வதாக ஐநாவின் உயரதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பின இளைஞர்களின் மரணம் தொடர்பான வழக்கின் தீர்ப்புகள் அதிருப்பதி அளிக்கின்றன – ஐ.நா
Reviewed by NEWMANNAR
on
December 07, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 07, 2014
Rating:


No comments:
Post a Comment