அண்மைய செய்திகள்

recent
-

கட்சி ஆதரவாளர்களிடம் தேர்தல்கள் ஆணையாளர் விசேட வேண்டுகோள்

ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக 19 வேட்பாளர்கள் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கையை அடுத்து தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கருத்து வெளியிட்டார்.

தேசிய மட்டத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மத்தியில் காணப்படுகின்ற சிறந்த உறவு கீழ் மட்டத்தில் உள்ள ஆதரவாளர்கள் மத்தியிலும் காணப்பட்டால் இந்த தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு எமக்கு இலகுவாக இருக்கும். எனவே உங்கள் கட்சித் தலைவர்களது ஆலோசகைளை பெற்றுக்கொண்டு நாட்டின் சட்டங்களுக்கு மதிப்பளித்து ஏனையோரின் கருத்துக்களை இடமளித்து செயற்படுமாறு அனைத்து கட்சிகளின் ஆதரவாளர்களிடமும் நான் கேட்டுக்கொள்கின்றேன். 1931ஆம் ஆண்டிலிருந்து சர்வஜன வாக்கு உரிமையை எமது நாடு பெற்றுக்கொண்டது. முழு ஆசிய நாடுகளையும், அவுஸ்திரேலியாவையும் நோக்கும் போது எமக்கு முன்னர் நியூஸிலாந்து மாத்திரமே சர்வஜன வாக்குரிமையை பெற்றிருந்தது. ஆகவே தமது கட்சிகளின் தலைவர்கள் கூறுகின்ற ஆலோசனைகளின் படி செயற்படுமாறு நான் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். வன்முறைகளை தூண்டும் வகையில் எந்த ஒரு அரசியல் தலைவர்களும் செயற்பட மாட்டார்கள் என நான் நம்புகிறேன். வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு இடையிலான சிநேகபூர்வ உறவுகளை என்னால் கண்டுகொள்ள முடிந்தது.
கட்சி ஆதரவாளர்களிடம் தேர்தல்கள் ஆணையாளர் விசேட வேண்டுகோள் Reviewed by NEWMANNAR on December 09, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.