இலங்கை கடற்பரப்பில் கைதான தமிழக மீனவர்கள் 43 பேர் விளக்கமறியலில்
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 43 தமிழக மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பருந்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ் கணேசமூர்த்தி தெரிவித்தார்.
05 படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, 43 தமிழக மீனவர்களும் கடற்படையினரால் நேற்று கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய, இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளதென இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை கடற்பரப்பில் கைதான தமிழக மீனவர்கள் 43 பேர் விளக்கமறியலில்
Reviewed by NEWMANNAR
on
December 10, 2014
Rating:

No comments:
Post a Comment