மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதி மூடப்பட்டு மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்து அமைக்கப்பட்ட தேர்தல் பிரச்சார மேடை.(படங்கள் இணைப்பு)
எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இடம் பெறவுள்ள ஜனாதிபதித்தோர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னாரில் இன்று(16) செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்வுகள் இடை நிறுத்தப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு அமைச்சர்களான பசில் ராஜபக்ஸ,றிஸாட் பதியுதீன் உள்ளிட்ட பல அரசியல் வாதிகள் வருகை தர இருந்தனர்.
இந்த நிலையில் முசலியில் வைத்து விவசாய பாதீப்புக்கான நஸ்ட ஈடு,மன்னாரில் அலுவலகம் திறத்தல் மற்றும் மன்னார் பகுதியில் விசேட தேர்தல் பிரச்சாரக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று(15) திங்கட்கிழமை இரவு மன்னார் சிறுவர் பூங்கா பிரதா வீதி இடை மறிக்கப்பட்டு பாரி தேர்தல் பிரச்சார மேடை ஒன்றும் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களின் மன்னார் விஜயம் திடீர் என தடைப்பட்டது.
இதனால் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சகல நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டது.
எனினும் மன்னார் சிறுவர் பூங்கவிற்கு முன் வீதியை இடை மறித்து அமைக்கப்பட்ட தேர்தல் பிரச்சார மேடை இது வரை அகற்றப்படவில்லை.
இதனால் போக்குவரத்து பாதீப்பு ஏற்பட்டுள்ளதோடு வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.மேடை அமைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதும் அங்கு எந்த நிகழ்வும் இடம் பெறவில்லை.தற்போது மக்கள் மன்னார் பஸார் பகுதிக்குச் செல்ல மாற்றுப்பாதையினை பயண்படுத்தி வருகின்றனர்.
நிகழ்வு தடைப்பட்ட நிலையில் குறித்த பிரச்சார மேடை அகற்றாமை குறித்து மன்னார் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
(மன்னார் நிருபர்)
(16-12-2014)

Reviewed by NEWMANNAR
on
December 17, 2014
Rating:
No comments:
Post a Comment