யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் விசாரணை
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மோதலுடன் தொடர்புடைய இரண்டு தரப்பினரும் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
மோதலில் காயமடைந்த ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மூன்று உறுப்பினர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களில் ஐந்து பேர் ஏற்கனவே சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
ஒருவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோது, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகளுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பான முழுமையான காணொளி பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் விசாரணை
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
December 17, 2014
 
        Rating: 
      
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
December 17, 2014
 
        Rating: 


No comments:
Post a Comment