பிறந்துள்ள புதிய ஆண்டு புத்தெழுச்சி பெற்றுள்ளது.புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில்-றிப்கான் பதியுதீன்
நாட்டில் வாழும் அனைத்து மக்களும் அமைதி,சுபீட்சம்,பரஸ்பர அன்பு என்பவற்றை ஏற்படுத்தி சமத்துவத்துடன் வாழ இன்று மலர்ந்திருக்கும் 2015 ஆம் ஆண்டு அமைய வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் விடுத்துள்ள புதுவருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,,,
இன்று பிறந்திருக்கும் புதுவருடத்தில் காலடி எடுத்து வைக்கும் மக்களின் வாழ்வில் புதியதொரு புத்தெழுச்சி ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாகவும்,இது இந்த மக்களின் இந்த வருட செயற்பாட்டிற்கு பெரும் ஊக்கமளிக்கும் என தான் நம்புவதாகவும்,பிறந்திருக்கும் இந்த ஆண்டில் புதியனவற்றை உருவாக்கி அதன் மூலம் சகல சமூகங்களும் எதிர்பார்த்து நிற்கும் அந்த ஒற்றுமையினை பலப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்து விட்டதாக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் விடுத்துள்ள புதுவருட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிறந்துள்ள புதிய ஆண்டு புத்தெழுச்சி பெற்றுள்ளது.புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில்-றிப்கான் பதியுதீன்
Reviewed by NEWMANNAR
on
January 01, 2015
Rating:
.jpg)
No comments:
Post a Comment