ஜேர்மனில் குறைந்த வேலையின்மை: மகிழ்ச்சியில் மக்கள்
ஜேர்மனில் வேலையில்லா திண்டாட்டம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு ஜேர்மன்- மேற்கு ஜேர்மன் என பிரிந்திரிந்த ஜேர்மனி ஒன்றிணைந்த பிறகு முன்னேறுவதாக கூறப்படுகிறது.
கடந்த 1991ம் ஆண்டு முதல் 2012 வரை வேலையின்மை குறைந்துள்ளதாக புள்ளியியல் விவரங்கள் தெரிவிக்கின்றது.
மேலும் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 6.6 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக வேலையின்மை குறைந்துள்ளது.
இந்நிலையில் ஜேர்மன் ஒன்றிணைவதற்கு முன்பு இப்படி ஒரு வளர்ச்சி இல்லை என்றும் ஒன்றிணைந்த பிறகே வேலையில்லா திண்டாட்டம் குறைந்தது எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தற்போது முன்னேற்ற பாதையில் ஜேர்மனி பயணிப்பதால், ஜேர்மனியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
ஜேர்மனில் குறைந்த வேலையின்மை: மகிழ்ச்சியில் மக்கள்
Reviewed by NEWMANNAR
on
January 08, 2015
Rating:

No comments:
Post a Comment