மு.கா.வுக்கு வழங்கிய ஆதரவை அறுவர் வாபஸ் பெற்றனர்
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக சத்தியக்கடதாசியின் மூலமாக தாங்கள் வழங்கிய ஆதரவை, ஆறு உறுப்பினர்கள் வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
மு.கா., ஆட்சியமைப்பதற்காக மாகாண சபையிலிருக்கின்ற உறுப்பினர்களில் 20 பேர் சத்தியக்கடதாசியின் ஊடாக தங்களுடைய ஆதரவை தெரிவித்திருந்தனர். இதனையடுத்தே கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நஷீர் அஹமட் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்நிலையில், ஆறு உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கின்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னிச்சையாக செயற்படுவதாக கூறி, ஏனைய இரண்டு கட்சிகளைச்சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் தங்களுடைய ஆதரவை இன்று திங்கட்கிழமை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களான விமலவீர திஸாநாயக்க, டப்ளியு.டி.எச் வீரசிங்க, ஜயந்த விஜேசேகர, டி.எம்.ஜயசேனவும் தேசிய காங்கிரஸை சேர்ந்த எம்.எஸ் உதுமாலெப்பை மற்றும் எம்.எல்.எம். ஆமீர் லெப்பை ஆகியோரே இவ்வாறு வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர். திருகோணமலை, கிறீன் வீதியிலுள்ள சன்செடன் விடுதியில் இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்குறிப்பிட்ட அறுவரில் நால்வரே தங்களுடைய தீர்மானத்தை அறிவித்தனர்.
திருகோணமலை, கிறீன் வீதியிலுள்ள சன்செடன் விடுதியில் இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்குறிப்பிட்ட அறுவரில் நால்வரே தங்களுடைய தீர்மானத்தை அறிவித்தனர்.
மு.கா.வுக்கு வழங்கிய ஆதரவை அறுவர் வாபஸ் பெற்றனர்
Reviewed by NEWMANNAR
on
March 02, 2015
Rating:

No comments:
Post a Comment