தம்பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 273 குடும்பங்களை மடு பூ மலர்ந்தான் கிராமத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கை.-Photos
மன்னார் மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தம்பனைக்குளம் கிராம மக்களை மாற்றிடமாக மடு பூ மலர்ந்தான் கிராமத்தில் மீள் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தம்பனைக்குளம் கிராமத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் வெள்ளப்பெருக்கின் காரணமாக அக்கிராமம் வெள்ளத்தில் மூழ்குவதோடு அக்கிராமத்தைச் சேர்ந்த 364 குடும்பங்கள் தொடர்;ந்தும் பாதீக்கப்பட்டு வருகின்றனர்.
இக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் எவ்வித தொழில் வாய்ப்புக்களையும் மேற்கொள்ள முடியாத நிலையில் முடங்கியுள்ளதோடு ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கினால் அவர்கள் வளர்க்கின்ற கால் நடைகளும் உயிரிழக்கும் நிலை ஏற்பட்படுகின்றது.
இம்மக்களின் நலன் கருதி மடு பிரதான வீதியில் உள்ள பூ மலர்ந்தான் கிராமத்தில் காடுகளை வெட்டி அக்கிராம மக்களை மீள் குடியேற்ற முடிவெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தம்பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 273 குடும்பங்கள் தமது சுய விருப்பத்தில் பூ மலர்ந்தான் கிராமத்தில் மீள் குடியேறுவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் குறித்த 273 குடும்பங்களுக்கும் பூ மலர்ந்தான் கிராமத்தில் மடு பிரதேசச் செயலாளரினால் காணிகள் அளவீடு செய்யப்பட்டு வளங்கப்பட்டுள்ளது.
இந்த மக்கள் தற்போது தற்காலிக வீடுகளை அமைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.குறித்த கிராமத்தைச் சேர்ந்த 29 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக இந்திய வீட்டுத்திட்டமும் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த 273 குடும்பங்களில் 100 குடும்பங்களுக்கு லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தினால் நேற்று(2) தற்காலிக வீடு அமைப்பதற்கான கூரைத்தகரங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தம்பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 273 குடும்பங்களை மடு பூ மலர்ந்தான் கிராமத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கை.-Photos
Reviewed by NEWMANNAR
on
March 03, 2015
Rating:
No comments:
Post a Comment