மன்னாரில் எண்ணெய் வளம் -எரிவாயு, எரிபொருள் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி வைக்க தீர்மானம்
2020ம் ஆண்டில் எரிவாயு, மற்றும் எரிபொருள் இறக்குமதி நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் ஆணைமடு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இதுவரை எண்ணெய் வளமுள்ள இரு இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன.
இதனாலேயே 2020ம் ஆண்டளவில் வெளிநாடுகளிலிருந்து எரிவாயு மற்றும் எரிபொருள் இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மன்னாரில் எண்ணெய் வளம் -எரிவாயு, எரிபொருள் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி வைக்க தீர்மானம்
Reviewed by NEWMANNAR
on
March 07, 2015
Rating:

No comments:
Post a Comment