மட்டக்களப்பு வாகன விபத்தில் வங்கி முகாமையாளர் மரணம்-Photos
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாகனேரி பகுதியில் கொழும்பு- மட்டக்களப்பு பிரதான வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று தடம் புரண்டதில் பெண் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் மற்றும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து மட்டக்களப்பு பகுதி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் வாகனேரி பகுதியில் உள்ள வளைவில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டதில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் வாகனத்தில் கணவன், மனைவி மற்றும் கணவரது தாய் ஆகியோர் பயனித்துள்ளனர். இவர்கள் மூவரும் ஆபத்தான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் வீ.சி வீதி வந்தாறுமூலை பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு மாத குழந்தையின் தாயான திருமதி.சசிகலா ரதன் (வயது - 31) என்பர் மரணமடைந்துள்ளார்.
காயமுற்ற தாயும் மகனும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மரணமடைந்த திருமதி.சசிகலா ரதன் என்பவர் வாழைச்சேனை சனச அபிவிருத்தி வங்கியில் முகாமையாளராக கடமையாற்றியவர் என்றும், இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு வாகன விபத்தில் வங்கி முகாமையாளர் மரணம்-Photos
Reviewed by NEWMANNAR
on
March 07, 2015
Rating:
No comments:
Post a Comment