அண்மைய செய்திகள்

recent
-

அதிபர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும் இன்னும் பதில் அதிபர்களை நீக்கவில்லை: ஆசிரியர் சங்கம்


நாடெங்கிலும் பாடசாலை அதிபர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், பதில் அதிபர்களை நீக்குவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது.

அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கவில்லை என சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் வினவியபோது, நேற்றைய தினமே 1100 முதலாம்தர ஆசிரியர்களுக்கு அதிபர் நியமனம் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

குறித்த அதிபர்களை வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு நியமிப்பதற்கு கால அவகாசம் தேவையெனவும், இந்த வார இறுதிக்குள் அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எனவே, அதற்கான துரித ஏற்பாடுகளை மேற்கொண்ட பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார்.
அதிபர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும் இன்னும் பதில் அதிபர்களை நீக்கவில்லை: ஆசிரியர் சங்கம் Reviewed by NEWMANNAR on March 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.