மோடியின் வருகையைத் தொடர்ந்து நாளை பாராளுமன்றில் விசேட கூட்டத்தொடர்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை இலங்கை பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்கவுள்ளார்.
இந்தியப் பிரதமரின் வருகையைத் தொடர்ந்து நாளை பாராளுமன்றத்தில் விசேட கூட்டத்தொடர் ஒன்று இடம்பெறவுள்ளது என,பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள், சந்திக்கும் நான்காவது இந்திய பிரதமர் நரேந்திர மோடி என பாராளுமன்ற இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய பிரதமராக இருந்த ஶ்ரீ மொராஜி தேசாயி அவர்களே இறுதியாக பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருந்தார். இவர் 36 வருடங்களுக்கு முன்னர் 1979 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதற்கு முதல் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதி இந்திரா காந்தி அவர்களும் 1962 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி ஜவஹர்லால் நேரு அவர்களும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருந்தனர்.
நாளை இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்யவுள்ள நரேந்திர மோடி அவர்களுக்காக சபையில், சபாநாயகருக்கு அருகில் விசேட ஆசனம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.
மோடியின் வருகையைத் தொடர்ந்து நாளை பாராளுமன்றில் விசேட கூட்டத்தொடர்
Reviewed by NEWMANNAR
on
March 12, 2015
Rating:

No comments:
Post a Comment