மன்னார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வன விலங்குகள்,பறவைகள் சரணாலயம் என்ற போர்வையில் காணிகள் அபகரிப்பு-இரட்ணசிங்கம் .குமரேஸ்.-Photos
மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்களுக்கு பல்வேறு முட்டுக்கட்டைகள்,மற்றும் இடையூறுகள் ஏற்படுவதாக மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
கடந்த அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட 'வன விலங்குகள்,பறவைகள் சரணாலயம்' என்ற போர்வையில் மன்னாரில் குடியேற்றப்பகுதிகளில் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளினால்; தற்போதைய அபிவிருத்தி பணிகள் பாதீக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வங்காலை தொடக்கம் சிறுநாவற்குளம்,திருக்கேதீஸ்வரம் போன்ற பகுதிகளிலும்,மன்னார் நகரப்பகுதியான பள்ளிமுனை,மன்னார் கோட்டை,சௌத்பார்,ஸ்ரேசன் போன்ற பகுதிகளிலும் இவ்வாறு காணிகள் வன விலங்குகள்,பறவைகள் சரணாலயம் என்ற போர்வையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளினால் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளது.
குறிப்பாக கடந்த அரசாங்கம் சம்பந்தப்பட்ட துறை சார்பாக கலந்தாலோசிக்காது,எமது கருத்துக்களை கேட்காது திட்டமிட்ட வகையில் நில ஆக்கிரமைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் நகரத்தின் அபிவிருத்திப்பணிகள் முடக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள கோட்டை பகுதிளிலும் வன விலங்குகள்,பறவைகள் சரணாலயம் என பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்டுள்ளது.
இப்பகுதியிலே மன்னார் நீதிமன்றமும் காணப்படுகின்றது.இவ்வாறு உள்ள நிலையில் இப்படியான நில அபகரிப்புக்கள் என்பது திட்டமிட்ட வகையில் கடந்த அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதனை இப்படியான சங்பவங்கள் மிக தெழிவாக எடுத்துக்காட்டுகின்றது.
-எனவே புதிய அரசாங்கம் மக்களின் நலனை கருத்தில் கொண்டு நல்லாட்சியை வகுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
முதற்கட்டமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள இத்தடைகளை அகற்றி பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு உதவ வேண்டும் என மன்னார் நகர சபை உறுப்பினர் என்ற வகையில் மன்னார் மாவட்ட மக்கள் சார்பாக புதிய அரசை கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.என மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வன விலங்குகள்,பறவைகள் சரணாலயம் என்ற போர்வையில் காணிகள் அபகரிப்பு-இரட்ணசிங்கம் .குமரேஸ்.-Photos
Reviewed by NEWMANNAR
on
March 08, 2015
Rating:
No comments:
Post a Comment