அண்மைய செய்திகள்

recent
-

அடிப்படைவசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரி வவுனியா பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்


அடிப்படைவசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரி வவுனியா கற்குளம் பிரதேச மக்கள் மாவட்ட செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா கோயில்குளம் சந்தியிலிருந்து மாவட்ட செயலகம் வரை ஊர்வலமாக சென்ற மக்கள் மாவட்ட செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நலன்புரி நிலையங்களிலிருந்து கொண்டு செல்லப்பட்டு குறித்த பிரதேசத்தில் குடியேற்றப்பட்டு ஆறுவருடங்களைக் கடந்துள்ளபோதும் எந்த விதமான அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

தமக்கு வழங்கப்பட்ட அரை நிரந்தர வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் வீட்டுத்திட்டத்தில் தாம் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை தமது பிரதேசத்தில் வீதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்துதரப்படவில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
அடிப்படைவசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரி வவுனியா பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் Reviewed by NEWMANNAR on March 02, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.