முருங்கன் ஆத்திக்குழியில் இடம் பெற்று வரும் தொடர் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் மக்களால் பிடித்து கொடுக்கப்பட்ட இருவரை விடுதலை செய்த முருங்கன் பொலிஸார்.
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முருங்கன் ஆத்திக்குழி மற்றும் மாளிகைத்திடல் ஆகிய கிராமங்களில் கடந்த 10 தினங்களுக்கு மோலக தொடர்ச்சியாக திருட்டுச்சம்பவங்கள் இடம் பெற்று வருவதாகவும்,இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிராம மக்களினால் சந்தேகத்திற்கிடமான இருவரை பிடித்து முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைத்த போதும் எவ்வித அறிவித்தலும் இன்றி குறித்த இருவரையும் பொலிஸார் விட்டு விட்டதாக அந்த மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
-இவ்விடையம் தொடர்பாக அந்த மக்கள் மேலும் தெரிவிக்கையில்,,,
-முருங்கன் ஆத்திக்குழி மற்றும் மாளிகைத்திடல் ஆகிய கிராமங்களில் கடந்த 10 தினங்களுக்கு மோலக தொடர்ச்சியாக திருட்டுச்சம்பவங்கள் இடம் பெற்று வருவருகின்றது.
குறித்த 10 தினங்களுக்குள் 5 வீடுகள் உடைக்கப்பட்டு பெறுமதியான மின்சாதன பொருட்கள் உற்பட பல்வேறு பொருட்கள் திருடப்பட்டுள்ளது.
-இத்திருட்டுச்சம்பவங்கள் தொடர்பாக குறித்த கிராம மக்கள் முருங்கன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகளை செய்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் ஆத்திக்குழி கிராமத்தில் இரண்டு பேர் சந்தேகத்திற்;கிடமான முறையில் மோட்டார் சைக்கிலில் வந்தனர்.
-இவர்களை துரத்திய போது சந்தேகத்திற்கிடமான முறையில் ஓடினர்.உடனடியாக ஆத்திக்குழி மற்றும் மாளிகைத்திடல் ஆகிய கிராம மக்கள் குறித்த இருவரையும் துரத்திச் சென்ற போது குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளை வயலுக்கும் ஒழித்து விட்டு அவர்களும் ஒழிந்திருந்தனர்.
மக்கள் மடக்கிப்பிடித்து அவர்களை கட்டி வைத்தனர்.குறித்த இருவரில் ஒருவர் வன வள திணைக்களத்தில் கடமையாற்றுவதாக அடையாள அட்டையை காட்டியுள்ளார்.குறித்த இருவரும் புத்தளம் மற்றும் சிலாபம் போன்ற இடங்களைச் சேர்ந்தவர்கள்.
-குறித்த இருவரையும் முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைத்தோம்.பின் இன்று காலை முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போது குறித்த இருவரையும் விட்டு விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
-குறித்த இருவரையும் பிடித்துக்கொடுத்த மக்களிடம் முறைப்பாட்டை பெற்றக்கொள்ளாது அவர்களை விடுதலை செய்தமை குறித்து அந்த மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.முருங்கன் பொலிஸார் குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் அலட்சியத்துடன் செயற்படுவதாக அந்த மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
முருங்கன் ஆத்திக்குழியில் இடம் பெற்று வரும் தொடர் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் மக்களால் பிடித்து கொடுக்கப்பட்ட இருவரை விடுதலை செய்த முருங்கன் பொலிஸார்.
Reviewed by NEWMANNAR
on
March 08, 2015
Rating:

No comments:
Post a Comment