அண்மைய செய்திகள்

recent
-

ஹொண்டுராஸ் நாட்டில் வனப்பகுதியில் புதைந்த வெள்ளை நகரம் கண்டுபிடிப்பு


ஹொண்டுராஸ் நாட்டில் வனப்பகுதியில் புதைந்த நகரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஹொண்டுராஸ் நாட்டில் மஸ்கியூடியா என்ற பகுதியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு பழங்கால நகரம் ஒன்று மண்ணுக்குள் புகுந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘லிடார்’ என்ற அதிநவீன முறையில் விண்ணில் இருந்து கதிர்வீச்சுகளை பாய்ச்சி அந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கி.பி. 1000வது ஆண்டு முதல் 1400 ஆண்டு வரை இருந்திருக்க வேண்டும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இங்கு மண்ணுக்குள் புதைந்த பிரமிட்டுக்கள், அதில் புதைக்கப்பட்டவர்களின் மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகூடுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த நகரத்தில் மனிதர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்திருக்கின்றனர் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நகரத்துக்கு வெள்ளை நகரம் அல்லது குரங்கு கடவுள் நகரம் என பெயரிடப்பட்டுள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட புதையுண்ட நகரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஹொண்டுராஸ் அரசு ஈடுபட்டுள்ளது.




ஹொண்டுராஸ் நாட்டில் வனப்பகுதியில் புதைந்த வெள்ளை நகரம் கண்டுபிடிப்பு Reviewed by NEWMANNAR on March 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.