ஏழாலை, மயிலங்காடு ஸ்ரீ முருகன் வித்தியாசாலைக் குடிதண்ணீர் தாங்கிக்குள் விசமிகளால் நச்சுப் போத்தல்-27 மாணவர்கள் பாதிப்பு -Photos
யாழ்ப்பாணம் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய மாணவர்கள் நீர் அருந்தி சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து பெற்றோர்கள் , பழைய மாணவா்கள் மற்றும் நலன்விரும்பிகள் பாடசாலை முன்றலில் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
குடி நீருக்காகப் பயன்படுத்தப்படும் நீர்த்தாங்கியில் இருந்த நீரை குறித்த பாடசாலை மாணவர்கள் இன்று காலை அருந்தியவேளை, 27 மாணவர்கள் பாதிக்கப்பட்டு வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து பெற்றோர்கள் , பழைய மாணவாகள், நலன்விரும்பிகள் ஆகியோர் இணைந்து பாடசாலை முன்றலில் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோர் “மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு”, “சுன்னாகம் பொலிஸாரே உடனடியாக குற்றவாளியை கைது செய்” போன்ற கோஷங்களை எழுப்பியவாறு வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக குறித்த வீதியில் போக்குவரத்து சில மணிநேரங்கள் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏழாலை, மயிலங்காடு ஸ்ரீ முருகன் வித்தியாசாலைக் குடிதண்ணீர் தாங்கிக்குள் விசமிகளால் நச்சுப் போத்தல்-27 மாணவர்கள் பாதிப்பு -Photos
Reviewed by NEWMANNAR
on
March 19, 2015
Rating:

No comments:
Post a Comment