மலரவிருக்கும் மன்மத வருட கரும அனுஷ்டானங்கள்
மன்மத வருடம் சித்திரை 1ம் திகதி 14.4.015 செவ்வாய்க்கிழமை பகல் நாடி 15விநாடி 12.23 அபரபக்க தசமி திதியில் அவிட்ட நட்சத்திரத்தின் 2ம் பாதத்தில் வியாகாத நாமயோகத்தில் ,விட்டிக்கரணத்தில்,கடக லக்கினத்தில்,கடக நவாம்சத்தில் இப்புதிய மன்மத வருஷம் பிறக்கின்றது.
புண்ணியகாலம்
அன்று முற்பகல் காலை 8.23 முதல் பிற்பகல் 4.3 வரை விஷு புண்ணிய காலமாகும் .
ஸ்நான முறை
இப் புண்ணிய காலத்தில் யாவரும் விதிப்படி சங்கற்பித்து மருத்துநீர் தேய்த்து சிரசில் விளா இலையும் காலில் கடம்ப இலையும் வைத்து ஸ்நானம் செய்தல் வேண்டும்.
ஆடைகள்
வெண்மை,சிவப்பு நிறமுள்ள பட்டாடை ஆயினும் வெண்மை,சிவப்புக்கரை அமைந்த புதிய பட்டாடையாயினும் அணிய வேண்டும்.
உண்டிகள்
அறுசுவை அமைந்த உண்டிகளுடன் வேப்பம்பூ ,பொரிக்கறி,கசப்பு,என்பவை சேர்த்தருந்த வேண்டும்.
தோஷ நட்சத்திரங்கள்
மிருகசீரிடம் ,திருவாதிரை,புனர்பூசம் 1ம்,2ம் ,3ம் கால்கள் ,சித்திரை உத்தராடம் 2ம் ,3ம்,4ம் காதல்,திருவோணம் ,அவிட்டம்,இவ் நட்சத்திரங்களில் பிறந்தோர் தவறாது மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து இயன்ற தான தருமங்களை செய்து சங்கிரம தோஷத்தை நிவர்த்தி செய்யக்கடவர்.
கை விஷேச நேரங்கள்
15.04.015
மு.ப 9.57---மு.ப 10.25 வரை
மு.ப 10.23--மு.ப 11.58 வரை
பி.ப 2.10--பி.ப 4.06 வரை
ஆதாரம்---வாக்கிய பஞ்சாங்கம்
மலரவிருக்கும் மன்மத வருட கரும அனுஷ்டானங்கள்
Reviewed by NEWMANNAR
on
April 13, 2015
Rating:

No comments:
Post a Comment