மரணத்தின் விளிம்புவரை சென்ற பெண் கைதி, தண்டனைக்கு தப்பியது எப்படி?
இந்தோனேசியாவில் போதை வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் கைதி மேரி ஜேன் மட்டும் நேற்று முன்தினம் கடைசி நிமிடத்தில், தண்டனைக்கு தப்பினார். இவர் தனது சூட்கேஸில் 2.6 கிலோ ஹெராயின் போதைப்பொருளுடன் சிக்கியவர் ஆவார்.
2 குழந்தைகளின் தாய். வீட்டு பணிப்பெண்ணாக இருந்து வந்தவர்.
மேரியை சுட்டுக்கொன்ற பின்னர் உடலை வைப்பதற்கு சவப்பெட்டி கூட வரவழைக்கப்பட்ட நிலையில், அவர் தண்டனைக்கு தப்பியது அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதுபற்றி இந்தோனேசிய அரசின் தலைமை வக்கீல் அலுவலக செய்தி தொடர்பாளர் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘மேரி ஜேன் தனது பெட்டியில் போதைப்பொருளை தனது எஜமானிதான் வைத்து விட்டார் என ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தார். இப்போது அந்த எஜமானி, போலீசில் ஆஜராகி உள்ளார். எனவேதான் மேரி ஜேனின் தண்டனை நிறுத்தப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.
மரணத்தின் விளிம்புவரை சென்ற பெண் கைதி, தண்டனைக்கு தப்பியது எப்படி?
Reviewed by NEWMANNAR
on
April 30, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 30, 2015
Rating:


No comments:
Post a Comment