மன்னார் தாராபுரத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் அருவியாற்றில் மூழ்கி பலி.
மன்னார், அருவியாற்றில் இன்று திங்கட்கிழமை(4) குளிக்கச்சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்கள் இன்று திங்கட்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள், மற்றும் முருங்கன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த என்.எம்.சிபான் (வயது 32),மற்றும் என்.எம்.முபாஸ் (வயது-18) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களே இவ்வாறு ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
-மன்னார் தாராபுரத்தைச் சேர்ந்த சுமார் ஒரே குடும்ப உறவினர்கள் இன்று திங்கட்கிழமை(4) காலை சிலாபத்துறையில் வெசாக் தோரணங்களை பார்வையிடுவதற்காக சென்ற நிலையில் மதிய உணவிற்காக அருவி ஆற்று பகுதிக்குச் சென்றுள்ளனர்.
இதன் போது என்.எம்.முபாஸ் (வயது-18) என்ற இளைஞன் முதலில் ஆற்றுக்குள் இறங்கி குளிக்க முற்பட்ட போது குறித்த இளைஞன் ஆற்றில் மூழ்க எத்தனித்த போது தன்னை காப்பாற்றுமாறு கத்தியுள்ளார்.
உடனடியாக குறித்த இளைஞனின் சகோதரனான என்.எம்.சிபான் (வயது-32) என்பவர் ஆற்றில் பாய்ந்து காப்பாற்ற முற்பட்டுள்ளார்.
-எனினும் குறித்த இருவரும் ஆற்றில் மூழ்கிய நிலையில் கிராம மக்களும் கடற்படையினரும் இணைந்து உடன் தேடுதல்களை மேற்கொண்டனர்.
இன்று திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் ஆற்றில் மூழ்கிய குறித்த இருவரும் மாலை 6.30 மணியளவில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த இரு சடலங்களும் மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரனைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-மன்னார் நிருபர்
(4-05-2015)

Reviewed by NEWMANNAR
on
May 05, 2015
Rating:

No comments:
Post a Comment